பண்டாரவளையிலுள்ள முதியோர் காப்பகம் ஒன்றிலுள்ள 14 முதியவர்களுக்கு செய்யப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, பண்டாரவளை பொது சுகாதார வைத்திய அதிகாரி டி.ஆர. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
காப்பகத்திலுள்ள முதியவர் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து, அவருக்கு என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கமைய அவரது அறிக்கைக்கமைய, அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து காப்பகத்திலுள்ள 14 முதியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட 9 பேரும் பிந்துனுவெவ கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்