USAID நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு நிவாரண உதவி .

breaking

இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான அவசர கொரோனா நிவாரண உதவி வழங்கப்படவுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நன்கொடையானது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், சுகாதார சேவையாளர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும் பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு , தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் ரீட் எஸ்லீமன் குறிப்பிட்டுள்ளார்.