தேசிய மட்ட தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாணவன் சாதனை !

breaking

இலங்கை ;-

2024 ஆம் ஆண்டுக்குரிய அகில இலங்கைக பாடசாலைகளுக்கிடையிலான கனிஸ்ட மெய்வல்லுனர் தடகளப்போட்டியில் 3000 ஆயிரம் மீற்றர் நீண்டதூர ஓட்டப்போட்டியில் முல்லைத்தீவு மாணவன் ஜெ.விதுஷன் முதல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியானது நேற்று( 14.07.2024 ) நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வறுமைக்குட்பட்ட குடும்பங்களை கொண்ட சரியான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் முத்தையன் கட்டு அ.த.க பாடசாலையில் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் பு.ஜனன்தன் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சினை வழங்கிவருகின்றார்.

அவரின் பயிற்சியில் உருவான மாணவனே நேற்று நடைபெற்ற அகில  இலங்கை ரீதியில் சாதனை படைந்துள்ளான். 3000 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் 9 நிமிடம் 2 செக்கன் 10 விநாடிகளில் ஓடி முடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த பாடசாலையில் பல விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் பயிற்சிகளை மேற்கொள்ள சரியான மைதானம் இல்லாத நிலையில் மாணவர்கள் விளையாட்டில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.